சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டியும் வருகிறது. நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. திடீர் மழையை எதிர்பார்க்காத மக்கள் பலரும் குடை எதுவும் இல்லாததால், மழையில் நனைந்தபடி சென்றதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருந்த நிலையில், இரவு 8 மணியளவில் திடீரென மழை வெளுக்கத் தொடங்கியது. சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை பெய்து வருவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலரும் மழையில் நனைந்தபடியே சென்றதையும் பார்க்க முடிந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/சென்னையில்-பல்வேறு-இடங்களில்-கனமழை




