நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, இன்று நாடாளுமன்றத்தை நோக்கி 'சலோ சன்சாத்' பேரணி நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்து இருந்தது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஜந்தர் மந்தரில் குவிந்தனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/cockroach-janata-party-members-lay-down-3-conditions-to-call-off-the-protest




