சென்னை, ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் வழிபாடு நடத்தும் முதல்-அமைச்சர் விஜய், மதுராந்தகம் தொகுதி முழுவதும் சுமார் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். இடைத்தேர்தல் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் கடந்த 25-ந்தேதி. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து தாராபுரம் தொகுதியில், வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். இந்தநிலையில், 2-வது முறையாக மதுராந்தகம் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்தமுறை மேடை இல்லாமல், ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறார். ரோடு ஷோ முன்னதாக பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களையும் வாக்காளர்களையும் நேரடியாக சந்திக்கும் வகையில் 45 கி.மீ. தொலைவிலான மாபெரும் ரோடு ஷோவாக இந்த தேர்தல் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழித்தடம் மற்றும் பயண விவரம்: இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் ரோடு ஷோ, இரவு 9 மணி வரை சுமார் 5 மணி நேரம் இடைவிடாது நடைபெறுகிறது. வழித்தடங்கள்: செங்கல்பட்டு எல்லையான மாமண்டூரில் தொடங்கும் பிரச்சாரப் பயணம் படாளம், கருங்குழி அய்யனார் கோவில், மதுராந்தகம் நகரம், பெரும்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் வழியாக அச்சரப்பாக்கத்தில் நிறைவடைகிறது. வழியெங்கும் சுமார் 39 முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மேல்மருவத்தூரில் வழிபாடு: பிரச்சார பயணத்தின் இடையே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் செல்லும் முதல்-அமைச்சர் விஜய், அங்கு அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாடு மேற்கொள்கிறார். தீவிர கண்காணிப்பு முதல்-அமைச்சர் விஜய்யின் வருகை மற்றும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ள ரோடு ஷோவை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாற்றுப் பாதைகளும், சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-hold-a-massive-45-km-roadshow-in-maduranthakam-today




