காந்தி நகர், குஜராத் மாநிலம் பவாநகர் மாவட்டத்தில் வேலவடார் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், மான், கரடி, யானை உள்பட பல்வேறு வன விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இதனிடையே, இந்த பூங்காவிற்கு அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வபோது வன விலங்குகள் நுழையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தேசிய பூங்காவுக்கு அருகே உள்ள கர்ஜியா கிராமத்தை சேர்ந்த இளைஞர் பொஹ்பாய் பர்மர். இவர் நேற்று காலை தனது வீட்டில் வளர்த்துவரும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இளைஞரை தாக்கிய சிங்கம் அப்போது கால்நடைகளை வேட்டையாட வந்த சிங்கம் இளைஞர் பர்மரை தாக்கியது. பர்மரின் தலை, கால், கை உள்ளிட்ட பகுதிகளில் கடித்துள்ளது. அப்போது அங்கு வந்த கிராமத்தினர் சிங்கத்தை விரட்ட கூச்சலிட்டுள்ளனர். ஆனால், சிங்கம் பர்மரை தொடர்ந்து தாக்கியது. இதையடுத்து, எந்தவித எதிர்வினையுமாற்றாமல் இளைஞர் பர்மர் தரையில் படுத்தவாறு கிடந்தார். சுமார் 30 நிமிடங்கள் பர்மர் அருகிலேயே இருந்தவாறு அவரை தாக்கிய சிங்கம் பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து பர்மரை மீட்ட கிராமத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பர்மரை சிங்கம் தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/video-shows-terrifying-moment-lion-refuses-to-let-go-of-gujarat-man




