கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நடுநாட்டு திருப்பதி என அழைக்கப்படும் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சாமி சன்னதிகள், கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 5-ந்தேதி(இன்று) கோவில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் முன்னிலையில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 29-ந் தேதி கோவிலில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் பூமாதேவி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று மாலை 6 மணியளவில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் தொடங்கின. கோவில் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உலகளந்த பெருமாள் என அழைக்கப்படும் திருவிக்கிரம சாமி கோவிலில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக இன்று நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணை பிளக்கும் அளவிற்கு ‘கோவிந்தா’ என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/consecration-of-the-ulagalanda-perumal-temple-in-tirukkovilur-devotees-chants-of-govinda-rent-the-air




