ரவி தேஜா நடித்திருக்கும் 'இருமுடி' படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த டோலிவுட் படத்தினை 'நின்னு கோரி', 'குஷி' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சிவா நிர்வானா இயக்கியிருக்கிறார். Irumudi - Ravi Teja பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ரவி தேஜா, "முதல்ல நான் தமிழ்ல பேச முயற்சி பண்றேன். ஏன்னா, எனக்கு தமிழ் மொழி மேல பெரிய ஈர்ப்பு உண்டு. ரெண்டு நாளுக்கு முன்னாடி ஒரு நேர்காணலில் கூடச் சொல்லியிருந்தேன். தமிழ் மொழியின் அந்த நையாண்டியான பேச்சு எனக்கு ரொம்பவே பிடிக்கும். என்னுடைய திரையுலகப் போராட்டங்கள் 90-களின் நடுப்பகுதியில சென்னைலதான் தொடங்கியது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்தான் இந்தப் படத்தின் ஆன்மா. எடிட் ரூமில் பின்னணி இசை இல்லாமலேயே இந்தப் படத்தைப் பார்த்தபோதே எனக்குள் ஒரு பெரிய சிலிர்ப்பு ஏற்பட்டது. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் பார்த்துட்டு ஆண்கள், சின்னக் குழந்தைகள்னு எல்லோரும் அழுறாங்க. உண்மையிலேயே இது இதயத்தைத் தொடும் ஒரு படம். Ravi Teja - Irumudi இந்தப் படத்தின் குழந்தை நட்சத்திரம், நட்சத்திராவுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்துக்கிட்டிருக்கு. பிரியா பவானி சங்கர் ரொம்பவே எதார்த்தமான ஒரு மனிதர், அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். கடைசியா, என் இயக்குநர் சிவா நிர்வானா. 'படம் கண்டிப்பா ஜெயிக்கப் போகுது, வெற்றி விழால பேசுறேன்'னு தெலுங்குப் படத்தின் இசை வெளியீட்டு விழால சொன்னேன். அதேபோல, இந்தச் சக்சஸ் மீட் சென்னையிலயும் நடந்திருக்கணும்னு ஆசைப்படுறேன்" எனப் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/tollywood/ravi-teja-speech-irumudi-movie-press-meet-chennai




