புதுடெல்லி காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு இன்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். 84 வயது பூர்த்தி செய்த அவருக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்டகாலம் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் அவருக்கு ஆசி வழங்கட்டும் என்று தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/prime-minister-modi-birthday-wishes-to-congress-president-mallikarjun-kharge




