விந்தோக், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா போராடி தோல்வியடைந்தது. முத்தரப்பு டி20 நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா - நமீபியா நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்கா 228 ரன்கள் அதன் படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக பிரிட்டோரியஸ், கானர் எஸ்டர்ஹய்சன் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கானர் 88 ரன்களில் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய பிரிட்டோரியஸ் 53 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. நமீபியா தரப்பில் அந்த அணியின் ஜன் பல்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போராடி தோல்வியடைந்த நமீபியா இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நமீபியா அணியின் தொடக்க வீரர் லோரன் ஸ்டீன்கம்ப், ஜன் பிரைலிங்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரைலிங்க் 36 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். லோரன் 44 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இறுதியில் நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவிடம் நமீபியா போராடி தோல்வியடைந்தது. நமீபியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/tri-series-t20-namibia-fightback-falls-short-vs-south-africa




