டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, டெல்லி கவர்னர் தரன்ஜித் சிங், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா, மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.பின்னர், பிரார்த்தனை, பஜனைப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: மகாத்மா காந்தியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சத்தியம், அகிம்சை, கருணை மற்றும் சேவை ஆகியவற்றின் ஒளிவிளக்காக திகழ்கிறது. இது ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து விளங்கும்.எல்லா உயிர்களிடமும் பகையற்றவராகவும், நட்புணர்வும் கருணையும் கொண்டவராகவும் இருப்பவர்; ‘எனது’ என்ற பற்றும் அகந்தையும் இல்லாதவர்; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவர்; பொறுமை கொண்டவர்.” என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/mahatma-gandhis-157th-birth-anniversary-leaders-pay-tribute-at-memorial




