காதல் கதைக்களத்தில் உருவாகிவரும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் விக்கி கவுஷலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘லவ் அண்ட் வார்’ பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் கடைசியாக 'ஹீரமண்டி' என்ற வெப் சீரிசை இயக்கி இருந்தார். இதனையடுத்து பன்சாலி, ‘லவ் அண்ட் வார்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கு முன்பு கடந்த 2007-ம் ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'சாவரியா' படத்தை பன்சாலி இயக்கி இருந்தார். இதனையடுத்து சுமார் 18 வருடங்களுக்கு பிறகு பன்சாலியுடன் ரன்பீர் கபூர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆலியா பட்டுடன் பன்சாலி ஏற்கனவே ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் பணியாற்றியுள்ளார். விக்கி கவுஷலுடன் அவர் இணையும் முதல் படம் இதுவாகும். ஜனவரி 21-ல் திரைக்கு வருகிறது இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது. ரன்பீர் கபூரின் வித்தியாசமான தோற்றம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரன்பீர் கபூர் பழமையான காரை ஓட்டியபடி காட்சியளிக்கிறார். தலைமுடியை பின்னால் வாரியபடியும், பென்சில் மீசை மற்றும் வட்ட வடிவ கண்ணாடியுடனும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். அதேநேரத்தில், அவரது இடது கை காயங்களுடன் ரத்தம் வழிந்த நிலையில் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆலியா பட் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் படத்தின் ஆலியா பட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. விக்கி கவுஷல் பட் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த நிலையில் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் படத்தின் விக்கி கவுஷலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vicky-kaushals-love-and-war-film-first-look-poster-out




