புதுடெல்லி, ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய விமானி ஒருவர், கடந்த ஆகஸ்ட் மாதம் விமான பயணத்தின்போது போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடுவானில் அந்த விமானம் சுமார் 300 அடி கீழே சரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விவகாரம் விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானி பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் விமான பயணத்தின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அனைத்து விமான நிறுவனங்களிலும் உள்ள விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை செய்ய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை ஜூலை 2027-க்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு கூறும்போது, 'போதைப்பொருள் பரிசோதனை தொடர்பான புதிய விதிமுறைகளின் வரைவு இந்த மாதம் இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்றார். தற்போது 10 சதவீத விமானிகளுக்கு மட்டும் சீரற்ற முறையில் பரிசோதனை நடக்கிறது. இந்திய விமானங்களில் பணிபுரியும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து விமானிகளுக்கு இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது' என்றார். கடந்த ஆகஸ்டில் தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன், போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-testing-for-all-pilots-dgca-order




