சென்னை, பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், தனது நகைச்சுவை கலந்த பேச்சாற்றலால் தலைமுறைகளை மகிழ்வித்தவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி என்னை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் மிகுந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ் உலகிற்கே பேரிழப்பு தமிழர்களின் இல்லங்களில் எந்தப் பண்டிகை வந்தாலும், பட்டிமன்றம் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் சாலமன் பாப்பையா அவர்கள். எளிமையான தமிழ், நகைச்சுவை ததும்பும் பேச்சு, ஆழமான சிந்தனை என தனது தனித்துவமான ஆளுமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது குரலும், கருத்துகளும், கலகலப்பான பேச்சும் எண்ணற்ற குடும்பங்களின் பண்டிகை மகிழ்ச்சியில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே இருந்தன. ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த அவரது இழப்பு, தமிழ் உலகிற்கே பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல் அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தாலும், அவரது தமிழும், நகைச்சுவையும், பட்டிமன்றப் பேச்சாற்றலும் என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiahs-demise-a-great-loss-to-the-tamil-world-nayinar-nagendrans-condolences




