Full artikkel
கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் திரைக்கு வர இருக்கிறது. ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டா குஸ்தி படத்தில்... இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தான் Autoimmune நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்திய என்னுடைய போஸ்ட் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதைப் பலர் கவனித்திருக்கிறீர்கள். அதற்குக் காரணம், கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துகொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவுதான் அந்தச் சோர்வு. ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்தச் சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது. விஷ்ணு விஷால் அதே சமயம், நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும், நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும், மேலும் கட்டா குஸ்தி 2 படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன. அதனால்தான் உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். என் உடல்நிலை விரைவில் குணமாகிவிடும். நீங்கள் காட்டிய அக்கறை, என்னை இன்னும் சிறப்பாக என் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ள ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும். ஒவ்வொரு ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். விஷ்ணு விஷால் இப்போது கட்டாகுஸ்தி படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் இறுதிகட்ட பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் "கட்டா குஸ்தி 2" படத்தை நீங்கள் அனைவரும் கண்டுகளித்திட காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார். நம் உடலைப் பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் (Immune system), தவறுதலாக நம் உடலின் ஆரோக்கியமான செல்களையே தாக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இந்தத் தலைகீழான செயல்பாட்டால் உடலில் பல்வேறு ஆரோக்கியப் பிரச்னைகள் உண்டாகும். இத்தகைய நோய்களைத்தான் ஆட்டோ -இம்யூன் நோய்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under


