தூத்துக்குடி, தூத்துக்குடி புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே திருநங்கையைக் கத்தியால் குத்தி, அவரிடமிருந்த செல்போனைப் பறித்துச் சென்ற 2 சிறுவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருநங்கையிடம் செல்போனை கேட்டு மிரட்டல் தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சித்ரா (வயது 47). இவர் புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று சித்ரா உணவகம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 சிறுவர்கள் அவரிடம் இருந்த செல்போனைக் கேட்டு மிரட்டியுள்ளனர். கத்திக்குத்து, செல்போன் பறிப்பு அதற்கு அவர் செல்போனைத் தர மறுத்துள்ளார். செல்போனைத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் வயிறு மற்றும் இடது முழங்கை ஆகிய இடங்களில் சரமாரியாகக் குத்தினர். பின்னர் அவரிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். மருத்துவ சிகிச்சை ரத்த வெள்ளத்தில் கிடந்த சித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 2 சிறுவர்கள் கைது பறிமுதல் செய்யப்பட்ட சித்ராவின் செல்போன் டவர் சிக்னலை ஆய்வு செய்தபோது, அந்தச் சிறுவர்கள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கே சென்ற புதியம்புத்தூர் போலீசார், தப்பியோடிய 2 சிறுவர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான 2 சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-two-juveniles-arrested-for-stabbing-a-transgender-woman-and-snatching-her-mobile-phone




