சென்னை, முன்னாள் எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர் ராஜினாமாவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சி.விஜயபாஸ்கர், கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகல் கடிதத்தையும் சபாநயாகர் ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து நேற்று தவெகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார். நீதிமன்றத்தில் மனு தாக்கல் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த சி.விஜயபாஸ்கரின் பதவி விலகல் ஏற்பை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளதாகவும், விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜினாமா விவகாரத்தில் மனதை செலுத்தாமல் எந்திரத்தனமாக சபாநாயகர் முடிவெடுத்துள்ளார் என்றும், இது அரசியல் சாசனம் மற்றும் இயற்கை விதிகளுக்கு எதிரானது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-files-case-against-former-mla-c-vijayabaskars-resignation




