மதுரை, யூடியூப் சேனல் ஊழியரை ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்டர்மெலன் ஸ்டார் மதுரையை சேர்ந்தவர் திவாகர். இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர். இவர் இன்ஸ்டாகிராமில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' என்ற பெயரில் புகழ்பெற்றவர். கஜினி திரைப்படத்தில் நடிகர் சூர்யா, சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் பாடல் ஒன்றில் அவர் தனது கையில் 'தர்பூசணி' பழத்தை வைத்து கொண்டு தனக்கு சல்யூட் அடிப்போரை அங்கிருந்து செல்லும்படி கூறுவார். அந்த சீனை வேடிக்கையாக நடித்து பிரபலமானவர் தான் இந்த திவாகர். தமிழ் 'பிக்பாஸ் -9' சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி, இன்ஸ்டாகிராமில் வேடிக்கையாக வீடியோ போன்றவற்றை பதிவிட்டு வருகிறார். மேலும் சில படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், பல தரப்பினர் மீது குற்றம் சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். கொலை மிரட்டல் இந்த வீடியோவை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப் சேனலை சேர்ந்த நபர் வீடியோவை டெலிட் செய்யும்படி திவாகரிடம் கூறியுள்ளார். அதற்கு திவாகர் அவரிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபர், திவாகர் மீது சென்னை கீழ்பாக்கம் போலீசில் புகார் செய்தார். கைது இதையடுத்து போலீசார் கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திவாகர் மீடு வழக்குப்பதிவு செய்தனர். திவாகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் இன்று மதுரை சென்று திவாகரை கைது செய்துள்ளனர். யூடியூபர் ஒருவரை மிரட்டி ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/watermelon-star-divakar-arrested-in-madurai




