சென்னை, ஜெம் வீரமணி வழக்கில், குற்றவாளியை தி.மு.க. பாதுகாத்ததாக முதல்-அமைச்சர் விஜய் குற்றம் சாட்டி பேசினார். அதேபோல, ஜெம் வீரமணியின் வழக்கை தி.மு.க. முடித்து வைத்ததாகவும், ஜெம் வீரமணியிடம் இருந்து தி.மு.க. ரூ.500 கோடி பெற்றதாகவும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோரும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, வழக்குத் தொடர்ந்தார். அதில், ஜெம் வீரமணி வழக்கில் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோருக்கு பல தகவல்கள் தெரிவதால், அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிறப்பு புலன் விசாரணைக்குழு போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த கோரிக்கை குறித்து டி.ஜி.பி.க்கு மனு அளித்த மறுநாளே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவர்களது பணியை செய்யட்டும். இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gem-veeramani-case-dmk-plea-to-summon-vijay-dismissed-high-court-order




