புதுக்கோட்டை, நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயதார்த்தம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை கீழப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகள் சோபனா (25 வயது). இவர்கள் ஆலங்குடி முல்லை நகரில் குடும்பத்தோடு வசித்து வந்தனர். சோபனாவுக்கு கடந்த 19-ந்தேதி நிச்சயதார்த்த விழா நடைபெற இருந்தது. தற்கொலை இந்நிலையில், 18-ந்தேதி இரவு பொருட்கள் வாங்க சின்னத்துரை தனது மனைவியோடு ஆலங்குடிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சோபனா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் சோபனாவை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். போலீசார் விசாரணை இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னத்துரை கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-before-engagement-police-investigation




