பெங்களூரு, பெங்களூரு புறநகர் பகுதியான பனவதி கிராமத்தில் விவசாயி ஒருவரின் செம்மறி ஆடு ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்றது. ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் பகுதியான பனவதி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு செம்மறி ஆடு சினையாக இருந்தது. நேற்று அந்த ஆடு குட்டிகளை ஈன்றது. அதில் 2 குட்டிகள் ஆண், 2 குட்டிகள் பெண் ஆகும். சமூக வலைதளங்களில் வைரல் வழக்கமாக ஆடு ஒரு குட்டி அல்லது 2 குட்டிகளை அதிகபட்சமாக ஒரே நேரத்தில் ஈன்றெடுக்கும். ஆனால் இந்த ஆடு ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்றதால் கோபாலகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/bengaluru-miracle-goat-gives-birth-to-4-kids-at-once




