புதுடெல்லி, சர்வதேச அளவில் விலை உயர்வு நீடித்து வருவதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 100 டாலரை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் கச்சா எண் ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பதோடு, பணவீக்க அழுத்தமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் அடிப்படையிலான இறக்குமதி செலவை அதிகரிப்பதோடு, வர்த்தக சமநிலை மற்றும் ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 56 சதவீதம் அதிகரித்து ரூ.6 லட்சம் கோடி (63.4 பில்லியன் டாலர்) ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 686 கோடி (40.5 பில்லியன் டாலர்) ஆக இருந்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், இந்த விலை உயர்வு அவற்றின் லாப வரம்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எச்சரிக்கை இந்தியாவில் இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் மாத சராசரியாக ஒரு பீப்பாய்க்கு ரூ.9 ஆயிரத்து 519 (100.75 டாலர்) ஆக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் மானிய இழப்பு அதிகரிப்பு போன்ற சவால்களையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/risk-of-rising-crude-oil-import-costs-for-india




