ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் அல்லு சிரிஷ், தனது குடியிருப்பு அருகே கோவில் ஒன்றில் நள்ளிரவு 3 நேரம் வரை அதிக சத்தத்தில் இசை ஒலிப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் நடிகராக வலம் வருபவர் அல்லு சிரிஷ். நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் ஆவார். கௌரவம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான அவர், பின்னர் கொத்த ஜண்ட, ஸ்ரீராஸ்து சுபமஸ்து, ஒக்க க்ஷணம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். அல்லு சிரிஷின் புகார் இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் அல்லு சிரிஷ், தனது குடியிருப்பு அருகே கோவில் ஒன்றில் நள்ளிரவு 3 நேரம் வரை அதிக சத்தத்தில் இசை ஒலிப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஐதராபாத்தின் ஷேக்பேட் பகுதியில் உள்ள அபர்ணா ஒன் குடியிருப்பில் வசித்து வரும் அல்லு சிரிஷ், வினோபா நகரில் உள்ள ஹனுமன் கோவிலில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சத்தத்தில் இசை ஒலிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த இசை இரவு 2 முதல் 3 மணி வரை தொடர்ந்து ஒலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “விநாயகர் சிலை கரைப்பு முடிந்தும் நிற்கவில்லை” இதுதொடர்பாக ஏற்கனவே பிலிம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக அல்லு சிரிஷ் தெரிவித்துள்ளார். விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகள் காரணமாக செப்டம்பர் 25-ம் தேதி வரை பொறுத்துக்கொள்ளுமாறு போலீசார் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், விழா முடிந்த பிறகும் அதிக சத்தத்துடன் இசை ஒலிப்பதாக தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் குடியிருப்பில் வசிக்கும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக ஏற்கனவே பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் பதில் அல்லு சிரிஷின் புகார் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், ஐதராபாத் மாநகர போலீசார் அவரது பதிவுக்கு பதிலளித்துள்ளனர். “இந்த விவகாரம் உரிய நடவடிக்கைக்காக பிலிம் நகர் காவல் நிலைய ஆய்வாளரிடம் பகிரப்பட்டுள்ளது” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்துக்குச் சென்று கோவில் நிர்வாகத்தினரிடம் பேசி, இசையின் ஒலியைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/music-blaring-until-3-am-actor-allu-sirish-lodges-police-complaint




