சென்னை, கோவில் திருவிழாக்கள், மத வழிபாடுகளில் யானைகளைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோவில் யானைகள் கோவில் திருவிழாக்கள், மத வழிபாடுகளில் யானைகளைப் பயன்படுத்தும்போது மாநிலம் முழுவதும் பொருந்தும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சேவா அறக்கட்டளை என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அசாமில் இருந்து 5 யானைகள் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்குக் கொண்டு வருவதற்கு முன்பு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஒப்புதல் பெறும்வரை, யானைகளை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவர தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் விலங்குகள் நல தன்னார்வ தொண்டு நிறுவனம், சுபர்ணா கங்குலி ஆகியோர் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குழு அமைப்பு இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், "ஏற்கனவே சேவா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ள கோரிக்கைகளுக்கு முற்றிலும் மாறாக இந்த இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதை ஏற்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம். தமிழ்நாட்டில் மத பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வழிபாடுகளில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானைகளை ஊர்வலங்களில் பயன்படுத்துவது தொன்மையான மரபாக இருந்து வருகிறது. எனவே, யானைகளைப் பயன்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக, தலைமை வனப் பாதுகாவலர், இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர், கால்நடை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்கிறோம். நெறிமுறைகள் யானைகளை விழாக்களில் பயன்படுத்துவதற்கு முன், அதன் உடற்தகுதி சரிபார்ப்பு, மாவட்ட அளவில் பதிவு செய்வது, ஓரிடத்தில் இருந்து யானைகளை மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு முன் ஓய்வு எடுக்க வேண்டிய நேர இடைவெளி, யானைகளைக் கொண்டுச் செல்வதற்கான பிரத்யேக வாகனங்கள், திருவிழாக்களின்போது பயன்படுத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்கள், பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவைகளில் இருந்து யானைக்கும் மக்களுக்கும் இருக்க வேண்டிய தூர இடைவெளி பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து இந்த குழு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். இதுதொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/kovil-thiruvizhaigalil-yanangalai-upayogikka-vazhikaattu-nerimuraigal-vakukka-kuzhu-amaippu-aikorttu-utharavu



