கூடலூர், வனவிலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கக்கோரி கூடலூர் பகுதியில் 48 மணி நேர கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. 48 மணி நேர வேலைநிறுத்தம் நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் லாரஸ்டன் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரை கடித்துக் கொன்ற புலியை சுட்டு கொல்ல வேண்டும். வனவிலங்குகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்றும், கூடலூர் தொகுதியில் செக்சன்-17 நில பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊருக்குள் வந்த புலி இந்நிலையில் 2 பேரை புலி கடித்து கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் நகருக்குள் மற்றொரு புலி பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. விமலகிரி, புத்தூர் கவலை, மார்த்தோமா நகர் பகுதியில் தொடர்ச்சியாக கால் நடைகளை கொன்றது. இதுதொடர்பாக வனத்துறையினர் அப்பகுதியில் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கூடலூர் அத்திப்பாளி அரசு பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள வீடுகளுக்கு முன்பு புலி வந்து நின்றது. இதைக்கண்ட அப்பகுதி மக் கள் அச்சமடைந்தனர். ஆனால், புலி எந்தவித பதட்டமும் இன்றி அவர்களை பார்த்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் சத்தம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து புலி அங்கிருந்து ஓடி, கூடலூர்-ஸ்ரீ மதுரை செல்லும் சாலையை கடந்தபடி தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதனிடையே பட்டப்பகலில் வீடுகள் முன்பு புலி வந்த தகவல் அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். மேலும் தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து புலியின் கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கும்கி யானைகள் இந்நிலையில் கூடலூர் அருகே நாலாம் நம்பர் பகுதியில் 2 பேரை அடித்துக் கொன்ற புலியை கண்காணித்துப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 120க்கும் மேற்பட்ட வன ஊழியர்களும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gudalur-two-kumki-elephants-brought-from-mudumalai-to-capture-the-man-eating-tiger




