புதுடெல்லி, டெல்லியில் நேற்று நடந்த இந்திய தடகள தொடரின் இறுதி சுற்றில் பெண்களுக்கான சங் கிலி குண்டு எறிதலில் தன்யா சவுத்ரி புதிய தேசிய சாதனை படைத்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த அவர் 68.35 மீட்டர் தூரம் எறிந்து சக மாநிலத்தவரான அனுஷா யாதவின் (67.02 மீ) சாதனையை கடந்தார். 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் விஷால் 45.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் மராட்டிய வீரர் அவினாஷ் சாப்ளே 8 நிமிடம் 32.39 வினாடிகளில் முதலி டத்தை பிடித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/indian-female-athlete-sets-record-in-the-final-round-of-the-athletics-series




