பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஆரம்பத்தில் ஸ்பிரிட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனோ பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். பகலில் மட்டும் 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று தெரிவித்தார். இதனால் அப்படத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டுள்ளார். ஸ்பிரிட் படத்தை தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். பிரபாஸ் நடிக்கும் இப்படத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டது குறித்து இயக்குநர் சந்தீப் ரெட்டியின் சகோதரர் பிரனய் ரெட்டி வங்கா அளித்துள்ள பேட்டியில், தீபிகா படுகோனே இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து புதிய காரணத்தை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''தீபிகா படுகோனேயுடன் படத்தின் தயாரிப்பாளர் 18 மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். தீபிகா படுகோனேயின் சம்பளம் தவிர்த்து படத்தின் லாபத்தில் ஒரு பங்கு கேட்டார். படத்தின் லாபத்தில் 10 சதவிகிதம் கேட்டார். தீபிகா, சந்தீப் அவர் எதையும் கேட்கலாம். கொடுக்கத் தயாராக இருந்தால், நாங்கள் கொடுக்கலாம். ஆனால் பொருளாதாரம் (பட்ஜெட்) நமக்கு வேலை செய்ய வேண்டும். அது வேலை செய்யவில்லை என்று நினைத்தோம். அதனால்தான் வேறு வழிகளைத் தேட ஆரம்பித்தோம். நாங்கள் அவருடன் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி விவாதித்தோம். தனிப்பட்ட முறையில் பேசப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தக் கூடாது. ஆனால் அவர் அனைத்தையும் கசியவிட்டார். அதனால்தான் நாங்கள் வருத்தம் அடைந்தோம். தீபிகா படுகோனே சம்பளத்தில் கூடுதலாக 5 முதல் 6 கோடி ரூபாய் கேட்டது மட்டும் பிரச்னைக்கு காரணம் அல்ல'' என்று தெரிவித்தார். தீபிகா படுகோனேவிற்கு பதில் நடிகை ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ட்ரிப்டி டிம்ரி அறிவிக்கப்பட்டார். தீபிகா படுகோனே தனிப்பட்ட முறையில் விவாதிக்கப்பட்ட கதை குறித்து வெளியில் கசியவிட்டதாக சந்தீப் ரெட்டியும் குற்றம் சாட்டி இருந்தார். அதேசமயம் 8 மணி நேரம் பணி என்பதை வலியுறுத்தியதில் எந்தவித தவறும் இல்லை என்று தீபிகா படுகோனே தெரிவித்து இருந்தார். ஸ்பிரிட் படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வர இருக்கிறது. தீபிகா படுகோனே இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக பெங்களூருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/trending/10-share-of-profits-what-is-the-story-behind-deepika-padukone-being-dropped-from-the-movie-spirit




