தங்கம், வெள்ளி விலை இறங்குமுகத்தில் இருக்கிறது. இதன் எதிரொலியாகத் தங்கம் இ.டி.எஃப் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்பும் இறங்குமுகத்தில் இருக்கிறது. இதனால், இ.டி.எஃப்களில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு அச்சம் எட்டிப்பார்க்கும். இவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏன் குறைந்திருக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். 1. அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்குமோ என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தங்கம்‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன? 2. அமெரிக்காவின் கருவூலப் பத்திரங்களின் வருமானம் அதிகரித்துள்ளது. 3. அமெரிக்காவின் நுகர்வு பணவீக்கத் தரவுகள் வெளியாகியுள்ளது. இதைப் பொறுத்து ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மாறுபடும் என்பதால், முதலீட்டாளர்கள் இந்தத் தரவிற்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் காரணங்களினால்தான் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. இ.டி.எஃப் முதலீட்டைத் தொடரலாமா? நீண்ட காலத்திற்காகத் தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்பில் முதலீடு செய்து வருபவர்கள், இ.டி.எஃப் முதலீட்டைத் தொடரலாம். இதே காரணத்திற்காக, தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்பில் முதலீடு செய்ய நினைப்பவர்களும், புதிதாக முதலீட்டைத் தொடரலாம். காரணம், நீண்ட கால அடிப்படையில், இரு உலோகங்களுமே விலை உயரும். அடுத்ததாக, சமீப காலமாக, தங்கம் விலை அதிக நிலையற்றத் தன்மை நிலவுகிறது. இதைப் பயன்படுத்தித் தங்கத்தில் டிரேடிங் செய்வதற்கும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/personal-finance/gold/why-gold-and-silver-prices-are-falling-and-what-investors-should-know




