சென்னை, தெற்கு ரெயில்வேயில் கடந்த ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை மூலம் ரூ.163 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். வந்தே பாரத் ரெயில் இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 ரெயில்வே கோட்டங்கள் உள்ளது. இந்த கோட்டங்கள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளை உள்ளடக்கி செயல்படுகிறது. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை சென்னை மைசூரு இடையே கடந்த 2022-ம் ஆண்டு இயக்கப்பட்டன. தெற்கு ரெயில்வேயில் சென்னை சென்டிரல் மைசூரு. சென்டிரல் கோவை, எழும்பூர் நெல்லை, சென்டிரல் விஜயவாடா, கோவை பெங்களூரு, சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை பெங்களூரு மங்களூரு-திருவனந்தபுரம் உள்பட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களை விட வந்தே பாரத் ரெயில்களின் பயண நேரம் குறைவு என்பதால் இச்சேவை பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2 மாத வருவாய் அதன்படி, 2026-27-ம் நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களில் வந்தே பாரத் ரெயிலில் 15.21 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.162.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2025-26-ம் நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 11.41 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். ரூ.119.52 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த நிதியாண்டில் வருவாய் வெகுவாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'வந்தே பாரத் ரெயில்களின், புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் வரை காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் தற்போதைய முன்பதிவு வசதி பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த வசதி, கடைசி நிமிடத்தில் பயணிக்க வேண்டிய எண்ணற்ற பயணிகள் சிரமமின்றி முன் பதிவைப் பெற உதவியுள்ளது. இதன் காரணமாகவும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-of-rs-163-crore-from-vande-bharat-train-service-in-april-and-may




