சென்னை, வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; கல்லூரிகளில் மாணவர்கள் குழுக்களை அமைத்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அரசியல் குறித்து பேசுவது, அரசு அதிகாரிகளிடம் தங்களது பிரச்சினைகளை எடுத்துரைப்பது உள்ளிட்டவை மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடும். கல்லூரி அரசியல் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு அதுவே தீர்வாக அமையும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்த போதிலும், தமிழகத்தில் கல்லூரி அரசியல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அரசியல் கட்சிகளுக்கு வரக்கூடிய இளம் தலைவர்கள் உருவாகாமல் போய்விடுவார்கள்ர். திரைத்துறையை பொறுத்தவரை சென்சார் போர்டு விதிமுறைகள் மேலும் கடுமையாக இருக்க வேண்டும். சென்சார் குறியீடுகளை திரைப்படங்கள் முறையாக பின்பற்ற வேண்டும். சமீபத்தில் வெளியாகும் சில திரைப்படங்கள் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லை. பெண்களை வல்கரான முறையில் காட்சிப்படுத்தும் திரைப்படங்களும் உள்ளன. சமூக வலைதளங்களை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களால் நல்ல விஷயங்கள் நடைபெறுவதுடன், பல்வேறு தவறுகளும் நடைபெறுகின்றன. மற்ற நாடுகள் சமூக வலைதளங்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டு வரும் நிலையில், இந்தியா ஏன் தயங்குகிறது. சட்டமன்றம் டிராமா மன்றமாக இருக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமாக மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது பழைய பஞ்சாயத்துகளை தீர்த்துக்கொள்ளும் இடமாக சட்டமன்றம் மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்துகள் கூட சட்டமன்றத்தில் தீர்க்கப்படுகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் இருக்கும் பஞ்சாயத்துகளும் அங்கேயே தீர்க்கப்படுகின்றன. ஆளும் கட்சி சார்பில் உள்ள உறுப்பினர்கள் பலரும் புதியவர்கள், அவர்களும் வேகமாக முன்னேறி வருகின்றனர். இன்றைக்கு தமிழக சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-legislative-assembly-should-be-a-forum-for-discussing-peoples-issues-annamalai




