கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனம்.122 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தில் 12 லட்சம் பங்குதாரர்கள் உள்ளனர். பல நூறு கிளைகள் கொண்ட இந்த நிதி நிறுவனத்தை கம்பெனி சட்டப்படி பங்குதாரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் நிகழும்போதும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கும்பகோணம் ஸகாய நிதி நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் பதவி வகிப்பார்கள். கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனம் கடந்த திமுக ஆட்சியில் ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் தலைவராக இருந்தார். மற்ற பதவிகளிலும் திமுகவினரே இருந்தனர். அதிமுக ஆட்சியாக இருந்தால் அக்கட்சியினர் பதவியில் இருப்பார்கள். இதுதான் இதுவரையிலான நடைமுறையாக இருந்தது. இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்த பிறகு அக்கட்சி நிர்வாகிகள் நிர்வாகப் பதவிகளுக்கு வருவதற்கு முயன்றனர். இதற்கிடையில், கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிர்வாகத் தேர்தல், மத்திய அரசின் நிதி நிர்வாகங்கள் முறைப்படி, நிர்வாகிகளை இ–ஓட்டிங் முறையில் தேர்ந்தெடுக்கும் வகையில் நிர்வாகிகள் மூலம் திருத்தம் செய்யப்பட்டது. இதன் பின்னணியில் திமுக எம்.பி கல்யாணசுந்தரம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில், நிதி நிறுவனத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், இயக்குநர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், நிர்வாக இயக்குநர் வேலப்பன், கூடுதல் இயக்குநர் ரவிசந்திரன் ஆகிய நான்கு பேரின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் கடந்த செப் 27 முதல் 30ம் தேதி வரை இ-ஓட்டிங் முறையில் தேர்தல் நடந்தது. இதில், மீண்டும் கல்யாணசுந்தரம், வேலப்பன், அன்பழன், ரவிச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்று நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட மாநகர செயலர் முருகானந்தம், மாவட்ட பொருளாளர் விஜய்சந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஞ்சனா, ஸ்ரீதேவி, மாணவரணி மாநகர தலைவர் சந்தேஷ் உள்ளிட்டோர் இ–ஓட்டிங் முறைக்கு விண்ணப்பிக்காமல், அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்ததால், விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். தவெக-வினர் போராட்டம் இந்நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கான விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தச் சூழலில் தங்கள் மனு நிராகரிக்கப்பட்டதால் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் அலுவலத்திற்குள் தவெக மாநகர செயலளர் முருகானந்தம் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட தவெக-வினர், நிர்வாக இயக்குநர்களுக்கான இ-ஓட்டிங் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறியும் நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்களின் அறைகளுக்கு முன்பு அமர்ந்து கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீஸார் தவெக-வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் நேற்று முழுவதும் கும்பகோணம் பரபரப்புடன் காணப்பட்டது. இது குறித்து உள்விபரங்கள் அறிந்தவர்களிடம் பேசினோம், ''கும்பகோணம் ஸகாய நிதி நிறுவனம் 12 லட்சம் பங்குதாரர்களைக் கொண்டது. தற்போதைய சூழலில் 5 லட்சம் பேர் நேரடி தொடர்பில் நிரந்தர பங்குதாரர்களாக உள்ளனர். இதில் ரூ.6,700 கோடி மதிப்பில் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.₹7,000 கோடி அளவில் பங்குதாரர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. கம்பெனி சட்ட முறைப்படி செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் இருப்பது பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது. திமுக எம்.பி கல்யாணசுந்தரம் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சி நிர்வாகிகள் அதன் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வந்து விடுவார்கள். இதுதான் நடைமுறை. கும்பகோணத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுக்குப் போதிய அனுபவம் இல்லை. நிதி நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வர நினைத்தார்களே தவிர அதுகுறித்த நடைமுறைகளைச் சரிவர தெரிந்து கொள்ளவில்லை. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக-வின் பழுத்த அரசியல்வாதியான எம்.பி கல்யாணசுந்தரம் இ-ஓட்டிங் முறைக்கு மாற்றும் செயல்களைக் கச்சிதமாக முடித்தார். தவெக-வில் நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிட்டவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்புக்காமல் நேரில் சென்று கொடுத்தனர். இதனால் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. போட்டியில் இருந்த திமுக-வினருக்கு 197 நபர்கள் வாக்களித்தனர். "தவெக அரசு 4 மாதங்களிலேயே தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கிவிட்டது" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு இதற்கு முன்பு எந்தக் கட்சி ஆட்சி பொறுப்பிற்கு வருகிறதோ அக்கட்சி நிர்வாகிகள் நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவார்கள். அவர்களது ஆதரவாளர்களான பங்குதாரர்களை ஒரு மண்டபத்தில் வைத்து செட்டிங் தேர்தல் நடத்துவார்கள். இதில் அதிகப்பட்சம் சுமார் 200 பங்குதாரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். இதையடுத்து தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகச் சொல்லி ஆளும் கட்சியினரை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுப்பார்கள். தொடக்கத்திலேயே இ-ஓட்டிங் முறைக்கு தவெக-வினர் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசித்து இதனைச் செய்திருந்தால் தவெக நிர்வாகிகளுக்கு இந்த ஏமாற்றம் நிகழ்ந்திருக்காது. தவெக-வினர் போராட்டம் தவெக-வினரின் அனுபவமின்மையைத் தன் அனுபவத்தை வைத்து வென்று விட்டார் கல்யாணசுந்தரம். மாநகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் பிரசாரத்தில் இருக்கும் அமைச்சர் வினோத், முருகானந்தத்திற்கு போன் செய்து என்ன நடக்கிறது என்று கூட கேட்கவில்லை என்கிறார்கள். இந்தச் சூழலில் நேற்று மாலை தவெக-வின் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஞ்சனா சிலருடன் சென்று கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தை மூடச் சென்றார். போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர். அஞ்சனாவின் இந்தச் செயல் வேடிக்கையாக இருந்தது. சொல்லப்போனால் இதில் தவெக கோட்டை விட்டு விட்டனர்'' என்றனர். 'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?' - விஜய்யின் 'மதுராந்தகம்' பிளான்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/tvk-missed-dmk-succeeded-what-happened-in-kumbakonam-mutual-aid-fund-election




