சென்னை, கோவில்களில் செல்போனுக்கு தடை தொடர்பாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியாக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பரவும் செய்தி “கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க மட்டுமே செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். உண்மை என்ன? மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2022-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, கோவில்களின் கண்ணியம் மற்றும் புனிதத்தன்மையை பேணும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டை தடுக்க வேண்டும், செல்போன்களுக்கான பாதுகாப்பு மையங்களை (Safety Deposit Counters ) அமைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, முதற்கட்டமாக 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் செல்போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-intended-to-reduce-the-number-of-devotees-information-authenticity-division-denies-claim




