கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் குறிப்பிட்ட சில டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 11 இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு இன்று (19.9.2026) மற்றும் நாளை (20.9.2026) ஆகிய 2 நாட்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை, மேல்புறம் முதல் குழித்துறை, நாகர்கோவில் முதல் சங்குதுறை கடற்கரை, சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி, தோவாளை முதல் பள்ளிகொண்டான் அணை, கூனாலுமூடு முதல் மிடாலம், அஞ்சுகண்கலுங்கு முதல் தேங்காய்பட்டணம், செருப்பாலூர் முதல் திற்பரப்பு, வைகுண்டபுரம் முதல் வெட்டுமடை, மேல்புறம் முதல் குழித்துறை மற்றும் பம்மம் முதல் குழித்துறை வரை உள்ள 11 இடங்களில் நடைபெற உள்ளது. டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு எனவே இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்) மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மட்டும் மேற்சொன்ன விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கி, முடியும் வரை மூடிவைத்திட வேண்டுமென உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ganesha-idol-procession-tasmac-orders-closure-of-shops-today-and-tomorrow




