அஜித்தின் ரேஸ் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடற்ற கார், களத்தில் இருந்த மற்றொரு காரின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கூட்டணி ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், ரேசிங் களத்தில் அவர் சந்தித்த சவால்களையும் பதிவு செய்துள்ள ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணத் திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார், மோட்டார் வாகனப் பந்தயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். சர்வதேச அளவில் நடைபெறும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். திடீர் விபத்து தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் அஜித்தின் அணி தீவிரமாகப் போட்டியிட்டது. பந்தயம் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், அஜித்தின் ரேஸ் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடற்ற கார், களத்தில் இருந்த மற்றொரு காரின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலைத் தொடர்ந்து, காரில் சக்கரங்கள் செயலிழந்ததுடன் அடுத்தடுத்து தீவிர தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டன. பாதுகாப்பு சாதனங்களால் தப்பினார் காரின் முன்பகுதி சேதமடைந்தபோதிலும், நவீன ரேசிங் கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் அஜித்தைக் காப்பாற்றின. மேலும், பல ஆண்டுகால பந்தய அனுபவமும் தொழில்முறை திறனும் கொண்ட அஜித், எவ்வித காயமும் இன்றி காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார். ரசிகர்கள் நிம்மதி அஜித் விபத்தில் சிக்கிய செய்தி பரவியதும் உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். ஆனால், அவர் காயம் எதுவும் இன்றி நலமாக திரும்பியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியான பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடரும் பந்தயப் பயணம் நடிகர் அஜித் கார் பந்தயங்களில் விபத்தைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இத்தாலி, ஸ்பெயின், மலேசியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பந்தயங்கள் மற்றும் பயிற்சிகளின் போது அவர் விபத்துகளை எதிர்கொண்டு, லேசான காயங்களுடன் மீண்டுள்ளார். அபாயங்கள் நிறைந்த விளையாட்டாக இருந்தாலும், சவால்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் பந்தயக் களத்தில் சாதனை படைத்து வருகிறார் அஜித். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-ajiths-car-accident-at-the-european-le-mans-race




