Full artikkel
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under

Publisert
22. juni 2026
Kildenavn
Vikatan
Land
India
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார். எடப்பாடி பழனிசாமி மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி: "பாக்யராஜ் சார் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மொழிகளைக் கடந்து, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டவை அவரது படைப்புகள். அவரது அசாத்தியமான கதைசொல்லல் திறனில் உருவான 'சுந்தரகாண்டா', 'அப்பாயிகாரு' போன்ற திரைப்படங்களில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்திய சினிமா இன்று தன் சிறந்த இயக்குநர்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்". தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தமிழ்நாடு இடைக்கால ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: "தமிழ்த்திரையுலகின் மூத்த இயக்குநரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு சினிமா உலகிற்குப் பேரிழப்பாகும். அவரது தனித்துவமான கதைசொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ்த்திரையுலகிற்கான அவரது அளப்பரிய பங்களிப்பு ஆகியவை அவரை மக்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தில் சிம்மாசனமிட்டு அமரச் செய்துள்ளன. அவர் விட்டுச்சென்ற கலைப்பணிகள், தலைமுறை கடந்தும் திரைப்பட இயக்குநர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் என்றும் ஊக்கமளிப்பதாக விளங்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஊர்வசி இரங்கல் இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார் . 'முந்தனை முடிச்சு' திரைப்படம் மூலம் இவர் தான் நடிகை ஊர்வசியைத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். பாக்யராஜ் மறைவு குறித்து ஊர்வசி, "எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். இதைத் தாங்குமளவு குடும்பத்தினருக்கு கடவுள் அமைதியை தர வேண்டும்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார். பாக்யராஜ் - ஊர்வசி தமிழ் திரையுலக வரலாற்றில் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜிற்கு தனி இடம் உண்டு. இவரது திரைக்கதைக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். திரைக்கதை மன்னனான பாக்யராஜ் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார் . முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ். 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் சிஷ்யராக திரைப்பயணத்தை தொடங்கிய பாக்யராஜ் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என இவருக்கு பல முகங்கள். 1971-ம் ஆண்டு 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். முதல் திரைப்படமே இவருக்கு பெயரையும், புகழையும் அள்ளி தந்தது. முந்தானை முடிச்சு, அந்த ஏழு நாள்கள், தூரல் நின்னு போச்சு என தமிழ் திரையுலக வரலாற்றில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்தார். பாக்யராஜ் குடும்பச் சூழல், நகைச்சுவை, எதார்த்தம், சமூக கருத்துகள் ஆகியவை இவரது திரைக்கதைகள் மற்றும் திரைப்படத்தின் பலம். தமிழ் மொழியுடன் இந்தி மற்றும் தெலுங்கிலும் திரைப்படங்களை இயக்கி உள்ளார். 'ஒரு கை ஓசை' திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதை இவர் பெற்றிருக்கிறார். சமீபத்தில் தான் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்திருந்தார். மாரடைப்பு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை சென்னையில் காலமானார் பாக்யராஜ் (வயது 73). முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
தமிழ்நாட்டில் துணை ஆட்சியர் , துணைக் காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் போன்ற உயரிய அரசுப் பதவிகள் குரூப் 1 தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. இந்த உயர் பதவிகளில் பெரும்பாலான இடங்கள் (சுமார் 90%) பதவி உயர்வு மூலமாகவே நிரப்பப்படுவதால், மீதமுள்ள 10 சதவீத இடங்கள் மட்டுமே டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனமாக மேற்கொள்ளப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி தேர்வு (கோப்புப்படம்) குறைந்த பணியிடங்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி 33 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள 10 சதவீத இடங்கள்கூட முழுமையாக நிரப்பப்படுவதில்லை என்று தேர்வர்கள் நீண்ட நாட்களாகக் குமுறி வருகின்றனர். இந்தச் சூழலில், 2026-ஆம் ஆண்டிற்கு வெறும் 26 காலிப் பணியிடங்களை மட்டுமே டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்திருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் 26 காலிப்பணியிடங்கள்..! இதில் குறிப்பாக 2 துணை ஆட்சியர்கள், 8 மாவட்டப் பதிவாளர்கள், 3 கூட்டுறவுத் துணைப் பதிவாளர்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, 2019-ல் 181 இடங்களும், 2024-ல் 90 இடங்களும், கடந்த 2025-ஆம் ஆண்டில் 78 இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள 26 என்ற எண்ணிக்கையானது கடந்த பத்தாண்டுகளின் ஆண்டு சராசரியில் பாதியை விடக் மிகக் குறைவாகும். ஆதில் பெய்க் வேதனையில் தேர்வர்கள் ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் தேர்வர்கள் இந்த உயரிய பதவிகளுக்காகத் தங்களைத் தயார் செய்து தேர்வு எழுதும் நிலையில், வெறும் 26 பேருக்கு மட்டுமே வேலை என்பது தங்களின் உழைப்பிற்கு இழைக்கப்படும் அநீதி என்று தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் குறைந்த காலிப்பணியிடங்களை அறிவிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்று கல்வியாளரும், சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளருமான ஆதில் பெய்க்கிடம் விசாரித்தோம். லட்சக்கணக்கான தேர்வர்களின் அர்ப்பணிப்பு இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "ஆண்டுதோறும் தங்களின் அரசுப் பணி கனவுக்காக வேலையை விட்டுவிட்டு லட்சக்கணக்கான தேர்வர்கள் முழுநேரமாகத் தங்களை அர்ப்பணித்துப் படித்து வருகிறார்கள். கடந்த காலங்களில் 90, 70 என இருந்த குரூப் 1 பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போது வெறும் 26 ஆகக் குறைந்திருப்பது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு (கோப்புப்படம்) இடஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டு முறையின் கீழ் பிசி, எம்பிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்டி, அருந்ததியர் எனப் பெரும்பாலான சாதியினருக்குள் உள் ஒதுக்கீடுகள் நடைமுறையில் உள்ளன. இது தவிர, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான பிஎஸ்டிஎம் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய இடஒதுக்கீட்டு கட்டமைப்பில், ஒட்டுமொத்தமாகவே வெறும் 26 சீட்டுகள் மட்டுமே அறிவிக்கப்படும்போது, பல பிரிவினருக்கு ஒரு காலிப்பணியிடங்கள் கூட கிடைக்காத சூழல் உருவாகிறது. உதாரணத்திற்கு, பிசிஎம் (முஸ்லிம்) பிரிவை எடுத்துக் கொண்டால் ஒரு சீட் மட்டுமே வரும். தேர்வர்களுக்கு ஏமாற்றம் அந்த ஒரு சீட்டும் கூட பெண்கள் அல்லது பிஎஸ்டிஎம் பிரிவினருக்குச் சென்றுவிடும் என்பதால், தனிநபர்களுக்கான வாய்ப்பு என்பது பல பிரிவுகளில் முற்றிலுமாக இல்லாமல் போய்விடுகிறது. இது தேர்வுக்காகப் பல வருடங்களாக உழைக்கும் தேர்வர்களைக் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பொதுவாக, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக அனைத்து அரசுத் துறைகளிடமிருந்தும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, காலிப்பணியிடங்களின் விவரங்களை அரசு பெற்று அதை டிஎன்பிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும். டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் எழும் கேள்வி! இந்த ஆண்டு பல துறைகளில் அதிக அளவில் ஊழியர்கள் ஓய்வு பெறுவதாகக் கூறப்படும் சூழலில், அனைத்து துறைகளுடனும் முழுமையாகக் கலந்தாலோசிக்காமல், ஒரு சில துறைகளின் காலிப்பணியிடங்களை மட்டுமே வைத்து இந்த 26 பணியிடங்கள் அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டதா என்ற பலத்த கேள்வியும் எழுகிறது. மேலும், இந்த ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடினமாக இருந்ததால், மத்திய அரசுப் பணிக்கு முயன்ற பல தமிழக மாணவர்களும் தற்போது குரூப் 1, குரூப் 2 தேர்வுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இப்படிப் போட்டி பல மடங்கு அதிகரிக்கும் வேளையில், காலிபணியிடங்கள் சுருங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாடு தேர்வர்களுக்கும் பெரிய பின்னடைவாகும்" என்று பிரச்னைகளை விளக்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவை நியமித்ததற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது குறித்து அதிமுக ஐ.டி விங் வெளியிட்டுள்ள அறிக்கை... "கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசாக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற கிரெடென்ஷியல் இருந்தால் போதுமா விஜய்? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதொடரும் நெல் மூட்டைகளில் முளைப்பு பிரச்னை: தடுப்பதற்கான 6 தீர்வுகள் இதோ! அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்? புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்!" அரிசி, மசாலா, மாம்பழத்திற்கு 'நோ' - இந்திய விவசாய ஏற்றுமதிகள் வெளிநாடுகளில் நிராகரிக்கப்படுவது ஏன்? கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற… pic.twitter.com/NorupZ9KE1 — AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 26, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Hold deg informert med de siste nyhetene fra pålitelige kilder