ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்வயர் அறுந்து விழுந்தது தெரியாமல் அதனை தொட்ட 6 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தம்பி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியாமல் அவரை தொட்ட 10 வயது அக்காவும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் கமுதி அருகே உள்ள பகுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள மின்வயர் ஒன்று எதிர்பாராதவிதமாக அறுந்து தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் அங்கு சென்ற பிரவீன் (6), மின்வயரை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தம்பி மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது தெரியாமல் அவரை நிறைமதி (10) தொட்டுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியதில், நிறைமதியும் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனும், சிறுமியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-brother-and-sister-died-after-an-electric-wire-fell-near-kamudi




