விஜய் டிவியில் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடந்ததில்லை. கொஞ்சம் தேதிகள் மாறி நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதென தீர்மானித்திருக்கிறார்கள். அதேபோல் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்து சிலரை அனுப்பலாமெனத் தீர்மானித்து 'பிக்பாஸ் தி காமன் மேன்' என்றொரு நிகழ்ச்சியையும் நடத்தி, அதில் தேர்வாகும் ஓரிருவரை பிக்பாஸ் போட்டியாளராக அனுப்புவதென்றும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த சீசனில் போட்டியாளர்களாகச் செல்கிறவர்களென சீரியல் நடிகை ஷப்னம் உள்ளிட்ட சிலரது பெயர்களை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். தற்போது மேலும் சிலர் குறித்த விவரங்கள் எக்ஸ்க்ளூசிவாக நமக்குக் கிடைத்துள்ளன. யார் யார் பார்க்கலாமா. குமரன் ஆர்மி கண்ட சீரியல் ஹீரோ! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் முதல் சீசனில் கதிர் கேரக்டரில் நடித்த குமரன் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லவிருப்பதாகச் சொல்கிறார்கள். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் இவரும் மறைந்த சித்ராவும் கதிர் முல்லை ஜோடியாக நடித்த போது ஆர்மியெல்லாம் அமைத்து இவர்களுக்கு ஆதரவு திரட்டினர், இவர்களது ரசிகர்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் முடிந்ததும் இரண்டாவது சீசனிலும் இவரை நடிக்க கேட்டது சேனல். ஆனால் சினிமா பக்கம் செல்வதாகச் சொல்லி அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். தொடந்து வெப்சீரிஸ், சினிமா என ஆர்வம் காட்டி வந்தார். வதந்தி சீரிஸ் மற்றும் குமார சம்பவம் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது நினைவிருக்கலாம். farina பாரதி கண்ணம்மா நடிகை ஆரம்பத்தில் தொகுப்பாளர், பிறகு சீரியல் என கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஃபரீனா ஆசாத் பிக்பாஸ் சீசன் 10 ல் போட்டியாளராக செல்லவிருப்பதாகத் தெரியவருகிறது. 'பாரதி கண்ணமா' தொடரில் நடித்த போது பர்சனல் காரணங்களால் சீரியலுக்குப் பிரேக் விட்டிருந்தது நினைவிருக்கலாம். சாந்தினி சாந்தினி தமிழரசன் சித்து பிளஸ் டூ, நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்த சாந்தினி தமிழரசனையும் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் பார்க்கவிருக்கிறோம். ஃபௌசி மௌனம் பேசியதே, துளசி ஆகிய சீரியல்களிலும் 'தட்றோம் தூக்றோம்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்த நடிகை ஃபௌசியும் பிக்பாஸ் தமிழ் 10ல் ஒரு போட்டியாளர் என்கிறார்கள். Biggboss சினிமா விமர்சகர் பிரசாந்த் யூடியூப் மூலம் திரைப்பட விமர்சனம் செய்து பிரபலமான பிரசாந்த் பிக்பாஸ் செல்வது உறுதியாகி விட்டதாம். இவரது தமிழ் சினிமா ரிவ்யூ சேனல், சினிமா ஏரியாவில் ரொம்பவே பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. காமன் விமன்! பிக்பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்வார்கள் எனச் சொல்லப்பட்டதல்லவா? அந்ந கேட்டகிரியில் காமன் மேனில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் பிரபலமான முனியம்மாவும் பிக்பாஸ் பத்தில் ஒரு போட்டியாளராகச் செல்லவிருப்பதாகச் சொல்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/television/some-expected-contestants-list-of-biggboss-tamil-10



