சென்னை, அடுக்கடுக்கான வழக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு இந்த நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் நேற்று முன்தினம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை செந்தில்பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்துதான் அவர் தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். நேற்று காலையில் இந்த ஓட்டலுக்கும், லஞ்சஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு யுவராஜ் தலைமையில், 3 அதிகாரிகள் சென்றனர். அங்கு செந்தில்பாலாஜி தங்கியிருந்த அறையில், செந்தில்பாலாஜி முன்னிலையில் சோதனை நடத்தினார்கள். பிற்பகலில் சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சோதனையின்போது, செந்தில்பாலாஜியிடம் சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தப்பட்டது. லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணைக்கு, செந்தில்பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். முன் ஜாமின் மனு இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு 3-வது வழக்காக இன்று விசாரணைக்கு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-corruption-case-senthil-balaji-files-petition-seeking-anticipatory-bail




