புதுடெல்லி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்பிரீத் சிங்குக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். காமன்வெல்த் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். பளுதூக்குதல் போட்டி 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆடவர் 110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்பிரீத் சிங்குக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதனை தமது சிறப்பான முயற்சியால், ஸ்னாட்ச் பிரிவில் லவ்பிரீத் சிங் காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார். அவரது அர்ப்பணிப்பையும், உறுதியையும் போற்றத்தக்கவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; "ஆடவர் 110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்பிரீத் சிங்கின் சிறப்பான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஸ்னாட்ச் பிரிவில் அவரது அபாரமான முயற்சி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளது. அவரது அர்ப்பணிப்பும் உறுதியும் உண்மையிலேயே போற்றத்தக்கவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/pm-modi-congratulates-lovepreet-singh-on-commonwealth-silver-in-weightlifting




