சென்னை, மதுராந்தகம் இடைத்தேர்தலுக்காக மாமண்டூர் பகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய்க்கு மலர் தூவி உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் கடந்த 25-ந்தேதி. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து தாராபுரம் தொகுதியில், வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். இந்தநிலையில், 2-வது முறையாக மதுராந்தகம் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்தமுறை மேடை இல்லாமல், ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சாலைவலத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கினார். வழிநெடுகிலும் முதல்-அமைச்சர் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரசார வாகனத்தில் மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலுடன் நின்றபடி, அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் வரை சுமார் 35 சந்திப்புகளில் பிரசார வாகனத்தில் நின்றபடி, தொண்டர்களின் வரவேற்பை ஏற்று முதல்-அமைச்சர் விஜய் வாக்கு சேகரிக்கிறார். சுமார் 35 கிராமங்கள் வழியாக செல்லும் முதல்-அமைச்சர் விஜய் மாமண்டூர் புக்கத்துறை சந்திப்பு படாளம் சந்திப்பு ஜானகிபுரம் சந்திப்பு மேலவலம்பேட்டை சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் வடக்கு புறவழிச்சாலை நுழைவு, மதுராந்தகம் தெற்கு புறவழிச்சாலை, அய்யனார் கோவில் சந்திப்பு, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், கிளியாநகர், செம்பூண்டி, கீழாமூர், பசுவங்கரணை, ராமாபுரம், மோகல்வாடி, எலப்பாக்கம், பொற்பணங்கரணை, அணைக்குன்றம், கீழ்அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர், பெரும்பேர்கண்டிகை, கடமலைப்புத்தூர், தென்பாக்கம் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், பெருவெளி, முதுகரை, வில்லவராயநல்லூர், மாம்பாக்கம், மதுராந்தகம் சாலை வலத்தின்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சென்று முதல்-அமைச்சர் விஜய் தரிசனம் செய்கிறார். மதுராந்தகம் ரோடு ஷோவில் முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சயுடன் இருக்கும் புகைப்படத்தை ஒருவர் நினைவுப் பரிசாக வழங்கினார். மதுராந்தகம் ரோடு ஷோவில் முதல்-அமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவருக்கு நெற்பணிகளை நினைவுப் பரிசாக வழங்கினார். கப்பு முக்கியம் பிகிலு! மதுராந்தகம் இடைத்தேர்தலுக்காக தண்டலம் பகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய்க்கு தொண்டர் ஒருவர் வெற்றிக்கோப்பையை பரிசாக அளித்தார். மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் பாய் வழங்கினர். தேநீர் கடையில் விஜய் வாக்குசேகரிப்பு மதுராந்தகம் எல். எண்டத்தூர் பகுதியில் ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்த முதல்வர் விஜய், சாலையோர தேநீர் கடையில் தேநீர் அருந்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மதுராந்தகம் எல்.எண்டத்தூர் பகுதியில் ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்த முதல்வர் விஜய், அங்கு வயலில் வேலைசெய்த பெண்களிடம் கலந்துரையாடினார் மதுராந்தகம் தொகுதியில் பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கி மாற்றுத்திறனாளிகளை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய் டிராக்டர் ஓட்டி முதல்-அமைச்சர் விஜய் வாக்கு சேகரிப்பு இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் தொகுதியில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் விஜய். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/மதுராந்தகம்-தொகுதியில்-முதல்-அமைச்சர்-விஜய்-சாலை-வலம்-வழிநெடுக-மலர்-தூவி-பொதுமக்கள்-உற்சாக-வரவேற்பு-chief-minister-vijays-roadshow-in-madhurantakam-constituency-public-welcomes-him-with-flower-garlands




