பிரபல தொகுப்பாளினி விஜே எழிலரசி, நடிகர் அட்டகத்தி தினேஷ் உடனான காதலை ரசிகர்களுக்கு வெளிப்படையாக அறிவித்துள்ளார். ‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தினேஷ். இவர், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, குக்கூ, விசாரணை உள்ளிட்ட முக்கியத் திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து, இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘வேட்டுவம்’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக இருக்கிறது. நடிகர் தினேஷ் தனது 26ஆவது படமான ‘பந்தா கேங்ஸ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். தினேஷ் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. நடிகர் தினேஷ், தான் ஒரு பெண்ணைக் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், தனது காதல் வாழ்க்கை குறித்து நேர்காணல்களில் சூசகமாக தெரிவித்து வந்தார். காதலை அறிவித்த விஜே எழிலரசி தொகுப்பாளினி விஜே எழிலரசி, முக்கிய நடிகர்களை நேர்காணல் செய்தும் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், விஜே எழிலரசி, நடிகர் அட்டக்கத்தி தினேஷை காதலித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து, அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விஜே எழிலரசி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.எப்போதும் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கட்டும். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணங்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் உங்களை மட்டும்தான் தேர்ந்தெடுப்பேன். FYI -பெண்களே, தயவுசெய்து பாதுகாப்பான தூரத்தில் இருந்து மட்டுமே ரசியுங்கள், நன்றி. மேலும் கண்டிப்பான முறையில்.” என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவின் மூலம் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-famous-host-who-declared-her-love-for-actor-attakathi-dinesh




