சென்னை, விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் அறிவியல் புனைகதை, திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வரும் "கஸ்தூரி வீடு" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முக திறமையுடன் பயணித்து வருபவர். இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். நடிகராகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ‘விசாரணை’ படத்தில் காவல் அதிகாரியாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார். ‘கஸ்தூரி வீடு’. இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனி தற்போது ‘கஸ்தூரி வீடு’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆர். ஆனந்த் இயக்கும் இப்படம் அறிவியல் புனைகதை, திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வருகிறது. ஒரு மர்மமான வீடு, அதற்குள் மறைந்திருக்கும் பயங்கர ரகசியம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாத்தான் என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனியுடன் டேவிட் டிட்டோ, தனுஜா மதுரபந்துலா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கவனத்தை ஈர்த்த பர்ஸ்ட் லுக்! இதற்கிடையில்யில், ‘கஸ்தூரி வீடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வித்தியாசமான தோற்றத்தில் வெளியான இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வெளியான டீசர் இந்த நிலையில், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சயின்ஸ் பிக்சன், திகில் மற்றும் நகைச்சுவை அம்சங்களை கொண்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/teaser-release-of-the-film-kasthuri-veedu-starring-samuthirakani




