சென்னை, ஆசிய விளையாட்டில் இரட்டை வெள்ளி பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- 2 வெள்ளிப் பதக்கம் ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் இந்திய மகளிர் அணி பிரிவுகளில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று, இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பதக்க வேட்டை தங்களின் அசாத்திய திறமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பால் இந்தியாவின் பதக்க வேட்டையை வெற்றிகரமாகத் தொடங்கி வைத்திருப்பது பெருமிதம் அளிக்கிறது. தாங்கள் இன்னும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி, எண்ணற்ற சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-congratulates-elavenil-on-winning-double-silver-medal-at-asian-games




