கோவை, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பெத்தி'. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இதில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சண்டை காட்சியில் காயம் இதற்கிடையில், இந்த படத்திற்கான படத்துக்காக சண்டை காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தினர். கோவையில் அறுவை சிகிச்சை அதன்படி நடிகர் ராம்சரண் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா ஆஸ்பத்திரியில் கடந்த 26-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 27-ந் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரை தந்தை நடிகர் சிரஞ்சீவி, தாய் சுரேகா மற்றும் மனைவி உபாசனா உள்ளிட்ட குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகிறார்கள். அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் கள் கூறும்போது, நடிகர் ராம்சரணுக்கு சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. அவர் நலமுடன் உள்ளார். ராம்ச ரண் இன்று(வியாழக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/surgery-completed-actor-ram-charan-to-be-discharged-today




