ஜம்மு ஜம்மு-காஷ்மீரில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு நகரில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 11 பேர் இன்று பலியாகி உள்ளனர். இதுதவிர பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் 7 பேர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு இவர்களில் பூஞ்ச் மாவட்டத்தின் லோரன் பகுதியில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி இருக்கின்றனர். இதேபோன்று, தோடா மாவட்டத்தில் இன்று காலை 9.30 மணியளவில் பாறை உருண்டு பஸ் மீது விழுந்ததில், 2 பேர் பலியானார்கள். கல் தாக்கியதில் பெண் ஒருவரும், வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு நபர் ஒருவரும் பலியானார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/eleven-killed-in-rain-related-incidents-in-jammu-and-kashmir




