திருப்பதி, வயதான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர். விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுவதால், தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. 30 நிமிடங்களில். இந்த நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசிக்க, இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடைமுறை என்ன? இனி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் எவ்வாறு இலவச தரிசனத்திற்கு செல்வது என்பதை பற்றி பார்ப்போம். அதாவது, 65 வயதிற்கு மேலான பக்தர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் எஸ்-1-ல் காட்ட வேண்டும். பின்னர், கோவிலின் வலது சுவரையொட்டி, பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்லாம். இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால், எளிதாக நடந்து செல்லலாம். தரிசன வரிசைக்கு சென்றவுடன் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடித்து வெளியே வரலாம். சூடான சாப்பாடு தரிசனத்திற்கு பிறகு முதியோர் அனைவருக்கும் இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் வழங்கப்படும். மேலும், பேட்டரி கார்கள் மூலம் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கவுண்டருக்கும், பிறகு அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் செல்ல வசதி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/darshan-of-lord-tirupati-venkateswara-in-30-minutes-what-is-the-procedure




