'துருவங்கள் பதினாறு', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'நோட்டா', 'சோம்பி', 'சைத்ரா' உள்பட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இதனிடையே காதல் தோல்வியின் காரணமாக, தான் தனிமையில் இருப்பதாகவும், அதனால் என்னை நானே காதலிப்பதாகவும் ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், "எனக்கு சில இயக்குனர்கள், நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதை சொல்லும்போது ஒரு மாதிரியும், படப்பிடிப்புக்கு சென்றதும் அது வேறு மாதிரியும் இருக்கும். படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்காக வேறு வழி இல்லாமல் நடித்து விட்டு வருவேன். அந்த அனுபவத்தால், நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொண்டேன். நான் கடந்த 5 ஆண்டுகளாக எந்த பார்ட்டிக்கும் செல்வதில்லை. என் வீட்டிலேயே பார் இருக்கு, லைட் மியூசிக் இருக்கு, ஆல்கஹாலும் இருக்கு. என் வீட்டிலேயே பார்ட்டியும் நடக்கும். ஆனால் நான் குடிக்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-am-in-solitude-because-of-love-failure-yashika-anand




