அகமதாபாத், 11 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரமாண்டமான நிறைவு விழாவுடன் நிறைவடைந்தன. 39 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடம் இந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்றது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து இந்தியா தனது பயணத்தை பெருமையுடன் நிறைவு செய்தது. இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட காமன்வெல்த் கொடி 2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்த உள்ளநிலையில், நிறைவு விழாவில் காமன்வெல்த் கொடி மற்றும் செங்கோல் இந்திய ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா மற்றும் குஜராத் துணை முதல்-அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2030 காமன்வெல்த் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளன. இந்தியாவுக்கு கிடைத்த வரலாற்றுப் பெருமை 2010-ஆம் ஆண்டு புதுடெல்லியில் காமன்வெல்த் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இந்தியா, தற்போது 2030-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் மீண்டும் நடத்த உள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தும் இரண்டாவது நாடு என்ற வரலாற்று சிறப்பை இந்தியா பெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/glasgow-commonwealth-games-ends-as-flag-and-baton-handed-to-next-host-india




