கயானா, குளோபல் சூப்பர் லீக் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அமேசான் வாரியர்ஸ் அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 5 நாடுகள் பங்கேற்ற டி20 தொடர் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கயானா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த டி20 தொடரை மேற்குவங்காள கிரிக்கெட் வாரியம் நடத்தியது. குறைந்த ஸ்கோரில் சுருண்ட வாரியர்ஸ் இந்த தொடரின் இறுதிப் போட்டி, கயானாவின் பிராவிடன்ஸில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியனான அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், யூனிகார்ன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சால் வாரியர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 85 ரன்களுக்கு சுருண்டது. 79 ரன்களில் சுருண்ட யூனிகார்ன்ஸ் 86 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியும், வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 79 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் அமேசான் வாரியர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அமேசான் வாரியர்ஸ், இந்த ஆண்டு சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக குளோபல் சூப்பர் லீக் கோப்பையை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/global-super-league-2026-guyana-amazon-warriors-won-by-6-runs




