தமிழ்நாட்டுக்கும் - கர்நாடகாவுக்கும் மத்தியில் மேகதாது அணை விவகாரம் தீவிரமாகிவருகிறது. இது தொடர்பாக பா.ம.க எம்.பி அன்புமணி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, ``காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, காவிரி கடந்து செல்லும் ஏனைய பிற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை கர்நாடக மாநிலம் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தது. இந்தப் பதில் மீண்டும் இரு மாநிலகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. முதல்வர் விஜய் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர். இந்தப் பிரச்னையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமெனச் சட்டப்பேரவையில் பேசி இருந்தேன். கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்தச் சோபா மாடல் முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது!' - அமைச்சர்களிடம் முறையிட்ட விவசாயிகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/as-mekedatu-issue-heats-up-udhayanidhi-stalin-has-criticized-chief-minister-vijay




