சென்னை, தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட, 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம், தற்போது 'துணிப்பை திட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு, 2019ல் அப்போது ஆட்சியில் இருந்த, அ.தி.மு.க., அரசு தடை விதித்தது. இதையடுத்து, ஒருமுறை பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதற்கான, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த 2021, டிச., மாதம், அப்போதிருந்த தி.மு.க., அரசு, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, 'மீண்டும் மஞ்சப்பை' என்ற இயக்கத்தை தொடங்கியது. மக்கள் கூடும் இடங்களில், 10 ரூபாய் செலுத்தி மஞ்சப்பை பெறுவதற்கான இயந்திரங்கள் நிறுவப் பட்டன.இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தற்போது இத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கும் பணிகள் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது மீண்டும் மஞ்சப்பை என்ற பெயர் நீக்கப்பட்டு, 'துணிப்பை வழங்கும் திட்டம்' என்ற பெயரில், அந்த திட்டத்தை தொடர அரசு அனுமதித்து உள்ளது. இத்திட்டத்தின் கீழ், துணிப்பை வழங்க, இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 105 இடங்களில் இயந்திரங்கள் வைப்பதற்கும், அதில் வைப்ப தற்கு தேவையான துணிப்பை வழங்க, 'டெண்டர்' கோரும் பணிகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cloth-bag-scheme-to-be-revived-as-an-alternative-to-plastic-usage




