சென்னை, சமீபத்தில் சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்.’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ராமாபுரம் பங்களாவில் சிறை வைத்தது தெரிய வந்தது. மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலிசார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் ரியா என்ற பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-in-chennai-women-lured-with-promises-of-film-opportunities-and-forced-into-the-sex-trade




